Home One Line P2 திருமூர்த்தி அதிபர், துணையதிபரைச் சந்தித்தார்

திருமூர்த்தி அதிபர், துணையதிபரைச் சந்தித்தார்

846
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் டி.எஸ்.திருமூர்த்தி, தனது புதிய நியமனத்தை முன்னிட்டு நியூயார்க் புறப்படுவதற்கு முன்பாக இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்தை நேற்று வெள்ளிக்கிழமை (மே 15) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

புதுடில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் செயலாளராகப் பணியாற்றியபோது கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அதிபரின் ஆலோசனைகளைப் பெறும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் திருமூர்த்தி குறிப்பிட்டார்.

தொடர்ந்து இந்திய துணை அதிபர் வெங்கய்யா நாயுடுவையும் மரியாதை நிமித்தம் சந்தித்து அவரது ஆலோசனைகளையும் திருமூர்த்தி கேட்டறிந்தார். துணையதிபரின் கருத்துகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் திருமூர்த்தி தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவுக்கான இந்தியத் தூதராகப் பணிபுரிந்த திருமூர்த்தி அதன் பின்னர் புதுடில்லி திரும்பி வெளியுறவு அமைச்சின் செயலாளர்களில் ஒருவராகப் பணிபுரிந்தார்.

தற்போது நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நிரந்தர இந்தியப் பிரதிநிதியாக நியமனம் பெற்றிருக்கிறார்.