லிஸ்பன் – அமெரிக்காவுக்கு செல்லும் வழியில் நேற்று சனிக்கிழமை போர்ச்சுகல் நாட்டிற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு போர்ச்சுகல் பிரதமர் அந்தோணியோ கோஸ்தாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
அந்தோணியோ கோஸ்தா இந்தியாவின் கோவா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
போர்ச்சுகலில் குறுகிய காலம் மட்டுமே இருந்தாலும் மேலும் சில நிகழ்ச்சிகளிலும் மோடி கலந்து கொண்டார்.
2017-ஆம் ஆண்டு ஜனவரியில் பெங்களூருவில் நடந்த பிரவாசி பாரதிய திவாஸ் எனப்படும் வெளிநாட்டு இந்தியர்களுக்கான மாநாட்டில் போர்ச்சுகல் பிரதமர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது, இந்தியாவுக்கு அதிகாரத்துவ வருகையும் மேற்கொண்டு, தனது பூர்வீக மாநிலமான கோவாவுக்கும் வருகை தந்து அங்கு தனது மூதாதையர்களின் உறவினர்களையும் சந்தித்தார், அந்தோணியோ.
போர்ச்சுகலில் உள்ள இந்து ஆலயத்தில் இரு நாட்டு பிரதமர்களும் வழிபாடு
மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
போர்ச்சுகல் வருகையை முடித்துக் கொண்டு புறப்பட்ட நரேந்திர மோடியை வழியனுப்பி வைக்கிறார் போர்ச்சுகல் பிரதமர் அந்தோணியோ…