கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை காலை (24 ஜூன் 2017) கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் “இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன்” எனும் கருப்பொருளில் நடைபெற்ற உலகத்தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு எழுத்தாண்மை ஏந்தல் பெரு.அ.தமிழ் மணி தலைமையில் தொடங்கியது.
மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான த்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இம்மாநாட்டை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
மாநாட்டுத் தொடக்க விழாவில் (கெடா) டத்தோ டாக்டர் சுப்ரமணியம், எஸ்.கே.தேவமணி, டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா, டான்ஸ்ரீ க.குமரன்….
மாநாட்டுத் தொடக்க விழாவில் மஇகா தேசியத் துணைத் தலைவரும் பிரதமர் துறை துணையமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியும் கலந்து கொண்டார்.
பிற்பகலில் தொடர்ந்த மாநாட்டில், இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்தும் கணிசமான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து டாக்டர் சுப்ரா உரையாற்றுகிறார்….
மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் பிரபல இயக்குநர் வேலு பிரபாகரனுடன் டாக்டர் சுப்ரா….
டாக்டர் சுப்ராவுக்கு மாலை அணிவிப்பு…
மாநாட்டுப் பேராளர்களுடன் டாக்டர் சுப்ரா – பெரு.அ.தமிழ்மணி
மாநாட்டில் டத்தோ எம்.சரவணன் உரையாற்றுகிறார்….
ஒருங்கிணைப்பாளர் மாநாட்டுத் தலைவர் பெரு.அ.தமிழ்மணியுடன் எம்.சரவணன்….