Home Featured கலையுலகம் பிக்பாஸ்: எச்சை என்று கூறும் காயத்ரி, தேம்பித் தேம்பி அழும் வையாபுரி!

பிக்பாஸ்: எச்சை என்று கூறும் காயத்ரி, தேம்பித் தேம்பி அழும் வையாபுரி!

1538
0
SHARE
Ad

சென்னை – உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி, நட்பு ஊடகங்களில் கடந்த மூன்று நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது.

முதல்நாள் நிகழ்ச்சி சுமாராகப் போவதைப் போல் தோன்றிய நிலையில், இரண்டாம் நாள் சிறுசிறு பிரச்சினைகள் வெடிக்கத் தொடங்கின.

இந்நிலையில், தற்போது விஜய் தொலைக்காட்சி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் சில நொடிகள் காணொளி ஒன்றில், “இதுக்குத் தான் இந்த மாதிரி எச்சைகளோட வர மாட்டேன்னு சொன்னேன்” என்று காயத்ரி ரகுராம் சொல்கிறார்.

#TamilSchoolmychoice

உடனே கணேஷ் வெங்கட்ராமும், மற்றவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இன்னொரு காட்சியில் நடிகர் வையாபுரி தேம்பித் தேம்பி சத்தம் போட்டு அழுகிறார். நடிகை நமீதா ஒரு புறம் கண்ணைத் துடைக்கிறார்.

இதனால் அங்கு என்ன நடந்திருக்கும் என இப்போதே ரசிகர்களிடையே பரபரப்புத் தொற்றியிருக்கிறது.

இதனிடையே, முன்னதாக வெளியான காணொளி ஒன்றில் வையாபுரியும், கஞ்சா கருப்புவும் குளியறையில் பல்துலக்கிக் கொண்டிருக்கும் போது, அங்கு நடிகை ஓவியாவும், ஜூலியும் குத்தாட்டம் போடுகிறார்கள்.

அதைப் பார்த்து வையாபுரியும், கஞ்சா கருப்புவும் அதிருப்தி அடைந்து நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்வதாகக் குறை கூறுகிறார்கள்.