Home Featured வணிகம் மேக்சிஸ் உடனான முக்கிய ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது யு மொபைல்!

மேக்சிஸ் உடனான முக்கிய ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது யு மொபைல்!

1330
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மேக்சிஸ் நிறுவனத்துடன் இருந்த பிணையப் பகிர்வு (நெட்வொர்க்) மற்றும் கூட்டு ஒப்பந்தத்தை யு மொபைல் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனம் முறித்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறது.

வரும் 2018-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதியோடு இந்த ஒப்பந்தம் நிறைவடைவதாக மேக்சிஸ் நிறுவனம் இன்று புதன்கிழமை அறிவித்திருக்கிறது.

கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி, மேக்சிஸ் பிராட்பேண்ட் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனமும், யு மொபைல் நிறுவனமும் இந்த ஒப்பந்தத்தை செய்து கொண்டன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, இந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக யு மொபைல் நிறுவனத்திடமிருந்து தங்களுக்குக் கடிதம் வந்ததாக மேக்சிஸ் தெரிவித்திருக்கிறது.

எனினும், இந்த ஒப்பந்த முறிவால் மேக்சிஸ் நிறுவனத்தின் 2017-ம் நிதியாண்டின் முடிவில், ஒருங்கிணைந்த நிதி அறிக்கையில் எந்த ஒரு பொருளாதார விளைவையும் தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் மேக்சிஸ் தெரிவித்திருக்கிறது.