Home Featured தமிழ் நாடு பிக்பாஸ்: கடுப்பில் கஞ்சா கருப்புக்கு ‘ஷட் அப்’ சொல்லிய ஓவியா!

பிக்பாஸ்: கடுப்பில் கஞ்சா கருப்புக்கு ‘ஷட் அப்’ சொல்லிய ஓவியா!

1789
0
SHARE
Ad

சென்னை – பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள், ரசிகர்களிடையே சுவாரசியத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பிக்பாசில் கலந்து கொண்டிருக்கும் 15 போட்டியாளர்களில் கொஞ்சம் கவர்ச்சியும், காமெடியுமாகப் பார்க்கப்படுவது நடிகை ஓவியா தான்.

முதல்நாளே தூக்கம் வராமல் தனியாகச் சுற்றித்திரிந்த ஓவியா, கேமராவிடம் போய் ‘ஒரே ஒரு வாழைப்பழம் கொடு’ என்று கெஞ்சிக் கூத்தாடி மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வேலை கொடுத்தார். அவர்களும் அந்தக் காட்சியை வைத்து கலாய்த்துத் தள்ளினர்.

#TamilSchoolmychoice

அடுத்ததாக, நடிகர் ஆரரிடம் ‘நீ என்ன ஓரினச்சேர்க்கையாளரா?’, ‘என்னைக் காதலிக்க மாட்டியா?’, ‘ஹாட்டா’ (அழுத்தமாகக் கூறி) ஒரு கப் பால் வேண்டும்’ என்றெல்லாம் பேசி ரசிகர்களைச் சூடேற்றினார்.

தற்போது நிகழ்ச்சி மூன்றாம் நாளை எட்டியிருக்கும் நிலையில், ஏற்கனவே ஜூலிக்கும், காயத்ரி, ஆர்த்திக்கும் இடையே கடுமையான பனிப்போர் நடந்து வருகின்றது.

இந்நிலையில், தலைவர் சினேகனுடன் ஓவியா நேரடியாக வாக்குவாதம் செய்வது போலவும்,  கஞ்சா கருப்புவை ‘யு ஷட்அப்’ என்று ஓவியா அதட்டுவது போலவும் விளம்பரம் வெளியாகியிருக்கிறது. அது தான் இன்றைய சுவாரசியமாக அமையப்போகிறது.

இதனிடையே, இணையதளங்கள், நட்பு ஊடகங்கள் எனப் பலவற்றில் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்த கிண்டல்களும், கேலிகளும் தகவல்களுமாக பரவி வருவதைக் காண முடிகின்றது.

நிகழ்ச்சியின் சுவாரசியம் ஒருபுறம் இருக்க, நிகழ்ச்சியைக் கிண்டலும், கேலியும் செய்து வெளிவரும் மீம்ஸ்களும், காணொளிகளும் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.