சியோல் – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹைக்கும், அவரது உளவாளியான லியூ பியங் ஹோவுக்கும் மரண தண்டனை விதிப்பதாக வடகொரியா அறிவித்திருக்கிறது.
இந்த மரண தண்டனைக்கு மேல்முறையீடு எதுவும் கிடையாது என்றும், எப்போது வேண்டுமானாலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தண்டனை வழங்கப்படலாம் என்றும் வடகொரியா தெரிவித்திருப்பதாக அந்நாட்டு தேசிய ஊடகமான கேசிஎன்ஏ கூறுகின்றது.
இந்நிலையில், பார்க்கையும், லியூவையும் உடனடியாகத் தங்களிடம் ஒப்படைக்கும் படி வடகொரியா, தென்கொரியாவை வலியுறுத்தி வருகின்றது.
இதனிடையே, ஊழல், அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் தென்கொரிய நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பார்க், தென்கொரிய அதிபர் பதவியிலிருந்து விலகினார்.
தற்போது அவர் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பார்க் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.