Home Featured கலையுலகம் பிக் பாஸ்: கமல்ஹாசன் என்ன சொல்லப் போகிறார்?

பிக் பாஸ்: கமல்ஹாசன் என்ன சொல்லப் போகிறார்?

1830
0
SHARE
Ad

சென்னை – ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை ஒருவாரத்திற்கு முன்னர் தொடக்கி வைத்து விட்டு, அனைத்து பங்கேற்பாளர்களையும் அறிமுகப்படுத்தி விட்டுச் சென்ற கமலஹாசன், ஒருவார இடைவெளிக்குப் பின்னர் நேற்று சனிக்கிழமை ஒளிபரப்பான ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் மீண்டும் தோன்றினார்.

ஜூலியானா, அனுயா இருவரும் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்றிருப்பதால் அவர்கள் இருவரில் யார் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப் போகிறார்கள் என்பதை நாளை, அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப் போவதாகவும் கூறி கமல் நிகழ்ச்சியை நிறைவு செய்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

கமல்ஹாசன் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தாலும் அவராலும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய முடியாது. வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய அரங்கில் இருக்கும் அகண்ட திரையின்வழி கமலஹாசன் ஒவ்வொரு பங்கேற்பாளரிடமும் உரையாடினார். அவர்களின் உணர்வுகளையும், கருத்துகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஜூலியானா…

பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 30-ஆம் தேதி) பிக் பாஸ் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிகளை கமலஹாசன் ஒளிபரப்பினார். அந்த நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக, கமலும் ஒரு பார்வையாளராக அந்த சம்பவங்களை அமர்ந்து பார்த்தார்.

ஒரு கட்டத்தில் கஞ்சா கருப்பு, பரணியோடு வாக்குவாதம் செய்து அவரையே அடிக்க அருகிலிருந்து தீயணைப்புக் கருவியை எடுத்து ஓங்குகிறார். மற்றவர்கள் அவரைத் தடுத்து நிறுத்துகின்றனர். தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி கஞ்சா கருப்பு பரணியை விமர்சிக்கிறார்.

வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகள் காட்டப்பட்டு முடிந்ததும், மீண்டும் அரங்கிற்கு வந்த கமல்ஹாசன் கஞ்சா கருப்புவுக்கும், பரணிக்கும் இடையில் நடந்த சண்டை குறித்து விமர்சித்து விட்டு, கோபம் கூடாது என்று கஞ்சா கருப்புவுக்கு அறிவுரை வழங்குகிறார் கமல். இதைத்தான் தேவர் மகன் படத்திலும் தான் சுட்டிக் காட்டியதாக கமல் கூறினார்.

இறுதியில் நிகழ்ச்சியை நிறைவு செய்யும்போது, பங்கேற்பாளர்களில் இருவர் மிகக் குறைந்த வாக்குகள் பெற்றிருக்கின்றனர் என்றும் அனுயா மற்றும் ஜூலியானா ஆகிய இருவரும்தான் அவர்கள் எனக் கூறும் கமல், இவர்கள் இருவரில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போகிறவர் யார் என்பதை நாளை (அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கிறேன் என்று கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்கிறார்.

இவ்வாறு போகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் காட்சிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணிக்கு அஸ்ட்ரோவின் ஸ்டார் விஜய் 224 அலைவரிசையில் மலேசிய இரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

-செல்லியல் தொகுப்பு