சென்னை – அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருந்த செல்வி.ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
இந்நிலையில், முதலமைச்சர் பொறுப்பை சசிகலா தான் ஏற்க வேண்டுமென அமைச்சர் ஆ.பி.உதயகுமார் தற்போது கூறி வருவது கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேற்று திங்கட்கிழமை கூடிய அமைச்சர் ஆ.பி.உதயகுமாரும், செல்லூர் ராஜூ உட்பட இன்னும் சில அமைச்சர்களும், அம்மா பேரவையின் சார்பில் தமிழக முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
அத்தீர்மானத்தின் நகலை போயஸ் கார்டனுக்கும் அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, நேற்று டெல்லி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம், கட்சிக்குள் நிலவி வரும் குழப்பநிலை குறித்து ஆளுநர் வித்யாசாகரிடம் விளக்கமளித்துள்ளார்.
ஆளுநரும் தனது முழு ஆதரவை பன்னீர்செல்வத்துக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.