மும்பை – டாடா குழுமத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சைரஸ் மிஸ்திரி நேற்று திங்கட்கிழமை அறிவித்தார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ரத்தன் டாடா பொறுப்பு வகித்தார். அதன் பின்னர் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகிக் கொள்ள, சைரஸ் மிஸ்திரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
கடந்த அக்டோபர் மாதம் சைரஸ் தலைமைப் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதன்பின்னர் ரத்தன் டாட்டா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வந்த சைரசை, இவ்வாரத்திற்குள் சில முக்கியப் பொறுப்புகளில் இருந்து நீக்க டாடா குழுமம் யோசித்து வந்தது.
இந்நிலையில், நேற்று சைரஸ் மிஸ்திரி தனது பதவி விலகல் குறித்து திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.