Home Featured உலகம் ரஷியத் தூதர் கொலை: ரஷியா – துருக்கி உறவை சீர்குலைக்கும் முயற்சி!

ரஷியத் தூதர் கொலை: ரஷியா – துருக்கி உறவை சீர்குலைக்கும் முயற்சி!

836
0
SHARE
Ad

மாஸ்கோ – துருக்கியில் ரஷியத் தூதர் கொல்லப்பட்டுள்ளது, ரஷியா – துருக்கி இடையிலான நட்புறவை சீர்குலைக்கவும், சிரியாவில் அமைதி நிலவ ரஷியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் முயற்சியில் இடையூறு விளவிக்கும் நோக்கிலும் நடத்தப்பட்டிருக்கலாம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

“இதற்கு ஒரே ஒரு பதில் தான் உள்ளது – தீவிரவாதத்திற்கு எதிராக சண்டையிடத் துணிவது தான், போராளிகளும் இதனை உணருவார்கள்” என்றும் புடின் தெரிவித்துள்ளார்.

துருக்கிக்கான ரஷியத் தூதர் அண்ட்ரி கர்லோவ் நேற்று திங்கட்கிழமை, 22 வயதான துருக்கிய காவல் துறை அதிகாரி ஒருவரால் அங்காராவில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்டபோது அந்தக் காவல் துறை அதிகாரி இஸ்லாமிய ஆதரவு முழக்கங்களை கூறிவிட்டு, சிரியாவில் நடந்து வரும் மோதல்கள் குறித்து கடுமையாகக் குறை கூறினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice