Home Featured உலகம் துருக்கிக்கான ரஷியத் தூதர் சுட்டுக் கொல்லப்பட்டார்

துருக்கிக்கான ரஷியத் தூதர் சுட்டுக் கொல்லப்பட்டார்

809
0
SHARE
Ad

russia-ambassador-to-turkey-karlovஅங்காரா – துருக்கிக்கான ரஷியத் தூதர் அண்ட்ரி கர்லோவ் (படம்) நேற்று திங்கட்கிழமை, 22 வயதான துருக்கிய காவல் துறை அதிகாரி ஒருவரால் அங்காராவில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்டபோது அந்தக் காவல் துறை அதிகாரி இஸ்லாமிய ஆதரவு முழக்கங்களை கூறிவிட்டு, சிரியாவில் நடந்து வரும் மோதல்கள் குறித்து கடுமையாகக் குறை கூறினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் துருக்கிய அதிபர் எர்டோகன் தொலைபேசி வழி ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொடர்பு கொண்டு உரையாடினார்.

இது குறித்து பின்னர் கருத்துதரைத்த புடின் இந்தக் குற்றச் செயல் ரஷியாவுக்கும்-துருக்கிக்கும் இடையில் இருந்து நல்லுறவுகளுக்கும், சிரியாவில் ஏற்பட்டு வரும் அமைதிப் பணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி, அவற்றைக் கெடுக்கும் விதமான தூண்டுதல் என வர்ணித்தார்.

#TamilSchoolmychoice

கொலை செய்த நபர் யாருடைய தூண்டுதலின் பேரில் கொலை செய்தான் என்பதும் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் புடின் கேட்டுக் கொண்டார்.

துருக்கியத் தலைவர் அங்காராவில் ஓர் கலைக் கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது அந்த ரஷியத் தூதர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த பல மாதங்களாக மிகவும் நெருக்கடியான நிலைமையில் இருந்து வந்த ரஷியாவுக்கும், துருக்கிக்கும் இடையிலான தூதரக உறவுகள் அண்மையில் சிரியாவில் ஏற்பட்டு வரும் பிரச்சனைகள் காரணமாக தற்போது சுமுகமான நிலைமைக்குத் திரும்பியுள்ளன.

இந்தப் படுகொலை குறித்து ரஷியாவும், துருக்கியும் இணைந்து ஒரு கூட்டு புலனாய்வுக் குழுவை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளன.