Home Featured தமிழ் நாடு மோடிக்கு சசிகலா கடிதம்!

மோடிக்கு சசிகலா கடிதம்!

548
0
SHARE
Ad

sasikala-natrajan_650x400_71481785460சென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு தனக்கு ஆறுதல் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு சசிகலா தனித்தனியாக நன்றிக் கடிதம் எழுதியுள்ளார்.

பல்வேறு அலுவல்களுக்கு மத்தியில், பிரதமர் மோடி நேரில் வந்து இரங்கல் கூறியது தமிழக மக்களுக்கும், தனக்கும் ஆறுதல் அளிப்பதாகவும், அது மிகவும் பெருந்தன்மையான செயல் என்றும் சசிகலா அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, விமானக் கோளாறு ஏற்பட்ட போதும் கூட, மாற்று விமானத்தில் சென்னை வந்து இரங்கல் கூறியதற்காக குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் கடைசி வரை இருந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கும் நன்றி கூறியுள்ளார்.