Home Featured கலையுலகம் விஜய் கேட்டுக் கொண்டதால் ‘பைரவா’ இசை வெளியீடு இரத்து!

விஜய் கேட்டுக் கொண்டதால் ‘பைரவா’ இசை வெளியீடு இரத்து!

670
0
SHARE
Ad

bhairavaசென்னை – விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பைரவா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டிருந்தது.

ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மறைவு காரணமாக, அப்பாடல் வெளியீட்டு விழா வேண்டாம் என முடிவெடுத்துள்ளனர்.

நடிகர் விஜயும் அதையே கூறியதால், அவ்விழாவை இரத்து செய்வதாக விஜயா புரொடக்‌ஷன்ஸ் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து தயாரிப்பாளர்களான பி.வெங்கட்ராம ரெட்டி, பி.பாரதி ரெட்டி ஆகிய இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நாங்கள் தயாரித்த நம்நாடு திரைப்படத்தில் ஜெயலலிதா நடித்துள்ளார். அதோடு குடும்பத்தில் ஒருவராக இருந்த ஜெயலலிதாவின் திடீர் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனால் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருந்த விழாவை இரத்து செய்து விட்டோம்” என்று தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, வரும் டிசம்பர் 23-ம் தேதி, பைரவா பாடல்கள் நேரடியாகவே இணையதளங்களில் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.