Home Featured நாடு 24 மணி நேரத்திற்கும் மேலாக லிப்டில் சிக்கிக் கொண்ட ஈப்போ தம்பதி!

24 மணி நேரத்திற்கும் மேலாக லிப்டில் சிக்கிக் கொண்ட ஈப்போ தம்பதி!

876
0
SHARE
Ad

ஈப்போ – சுமார் 24 மணி நேரங்களுக்கும் மேலாக ஈப்போ மைடின் மெரு வணிக வளாகத்திலுள்ள மின் தூக்கியில் (லிப்டில்) சிக்கிக் கொண்ட வயதான தம்பதியை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர்.

எனினும், அவர்கள் இருவரும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் இருப்பதால், அமைதியான நிலையிலேயே இருந்து வருவதாகவும், காவல்துறையிடம் கூட அவர்கள் எதுவும் சொல்ல மறுப்பதாகவும் அவர்களது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் மின்தூக்கியில் சிக்கிக் கொண்ட அவர்களை, மறுநாள் சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் தான் மீட்புக் குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

#TamilSchoolmychoice

இதனிடையே, இச்சம்பவம் குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல இயலாது என்றும், உள்விசாரணை நடைபெற்று வருவதாகவும் மைடின் மெரு நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

மேலும் இது குறித்து ஈப்போ ஒசிபிடி துணை ஆணையர் சும் சாங் கியாங் கூறுகையில், இச்சம்பவம் குறித்து அத்தம்பதி காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர் என்று தெரிவித்திருக்கிறார்.