Home Featured நாடு அரச விமானத்தில் பாலி சுற்றுலா சென்ற நஜிப் – அறிக்கை தகவல்!

அரச விமானத்தில் பாலி சுற்றுலா சென்ற நஜிப் – அறிக்கை தகவல்!

911
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மீண்டும் ஒரு குடும்பச் சுற்றுலாவிற்காக மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அரசாங்க விமானத்தைப் பயன்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

கடந்த ஜூன் 27-ம் தேதி ஜாவாபோஸ்.காம் என்ற இணையதளம் வெளியிட்டிருக்கும் செய்தியில், நஜிப்பும், அவரது துணைவியார் ரோஸ்மாவும், பாலி தீவுக்கு தனி விமானத்தில் வந்திருப்பதாகவும், அவ்விமானத்தின் வால் பகுதியில் 9எம்-என்ஏஏ என்ற குறியீடு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. அந்த விமானம் முக்கியப் பிரமுகர்கள் பயன்படுத்தும் மலேசிய அரசாங்க விமானங்களில் ஒன்றாகும்.

இந்தோனிசியாவைச் சேர்ந்த மற்ற ஊடகங்கள், அவ்விமானத்தை “அரச விமானம்” அல்லது “தனிவிமானம்” என்று குறிப்பிட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

ஜூன் 26-ம் தேதி, பிற்பகல் 12.53 மணிக்கும் அவ்விமானம் பாலி தீவின் கூரா ராய் விமான நிலையத்தை அடைந்ததாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.

மேலும், நஜிப்பையும், அவருடன் வந்த 23 பேரையும், பாலி ஆளுநர் மேட் மங்கு பாஸ்திகா உட்பட, பாலி தீவின் முக்கியப் பிரமுகர்கள் ராஜ மரியாதை கொடுத்து வரவேற்று, அவர்களை பாதுகாப்புடன் நூசா டூவாவில் உள்ள செயிண்ட் ரெஜிஸ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாகவும் செய்திகள் கூறுகின்றன.

 

ஏற்கனவே நஜிப், அரசாங்க விமானத்தை ஆஸ்திரேலிய சுற்றுலாவிற்குப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை எதிர்கட்சிகள் முன்வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.