Home Featured கலையுலகம் பிக் பாஸ்: அனுயா வெளியேற்றப்பட்டார்!

பிக் பாஸ்: அனுயா வெளியேற்றப்பட்டார்!

1012
0
SHARE
Ad

சென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்டார் விஜய் தொலக்காட்சியில் ஒளியேறிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து நடிகை அனுயா வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே, இந்த நிகழ்ச்சியிலிருந்து உடல் நலம் காரணமாக நடிகர் ஸ்ரீ மருத்துவ காரணங்களைக் காட்டி வெளியேறிவிட்டார்.

இதைத் தொடர்ந்து இரண்டு பங்கேற்பாளர்கள் குறைந்த வாக்குகள் பெற்றிருந்த காரணத்தால், அவர்களில் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என சனிக்கிழமையன்று கமல்ஹாசன் நிகழ்ச்சியில் அறிவித்திருந்தார். அனுயா, ஜூலியானாதான் அவர்கள் இருவரும் என்றும் கமல் அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

பல சஸ்பென்சுகளுக்குப் பிறகு, இருவரில் வெளியேறுபவர் அனுயா என கமல்ஹாசன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு அனுயா வெளியேற ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு புகழ் ஜூலியானா நிகழ்ச்சியில் தொடர்ந்து நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அனுயா வெளியே வந்து அரங்கத்தில் இருந்த கமல்ஹாசனுடன் உரையாடி, பிக் பாஸ் வீட்டில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், மற்ற பங்கேற்பாளர்கள் பற்றி என்ன நினைக்கிறார் என்பது குறித்தும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அதன் பின்னர் நிகழ்ச்சி மற்ற பங்கேற்பாளர்களைக் கொண்டு தொடர்ந்தது. பங்கேற்பாளர்கள் அனைவரும் கமல்ஹாசனின் பழைய பாடல்களை, தங்களுக்குக் கிடைத்த ஆடைகளை உடுத்திக் கொண்டு, கமலைப் போன்றே ஆடியும், பாடியும், நடித்தும் காண்பித்தனர். கமலும் இந்தக் காட்சிகளைப் பார்த்து இரசித்தார்.

பிறகு அந்தப் பாடல்கள் குறித்த பழைய நினைவுகளையும் கமல் பகிர்ந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சுவாரசியக் காட்சிகளை இன்று திங்கட்கிழமை இரவு 9.00 மணிக்கு அஸ்ட்ரோவின் 224 ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் மலேசிய இரசிகர்கள் கண்டு களிக்கலாம்.