Home Featured தமிழ் நாடு திரையரங்குகள் அனைத்தும் திட்டமிட்டபடி மூடப்படும் – அபிராமி ராமநாதன்

திரையரங்குகள் அனைத்தும் திட்டமிட்டபடி மூடப்படும் – அபிராமி ராமநாதன்

1132
0
SHARE
Ad

சென்னை – 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு 18 விழுக்காடும், 100 ரூபாய்க்கு அதிகமான டிக்கெட்டுகளுக்கு 28 விழுக்காடும் ஜிஎஸ்டி-ல் வரி நிர்ணயம் செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்படும் என தமிழ்த் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்திருக்கிறார்.

மேலும், அபிராமி ராமநாதன் கூறுகையில், “நாங்கள் ஜிஎஸ்டி வரிக்கு எதிரானவர்கள் அல்ல. கேளிக்கை வரியை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி 28 விழுக்காடும், கேளிக்கை வரி 30 விழுக்காடும் விதித்தால் நாங்கள் எப்படி திரையரங்குகளில் காட்சிகளை ஓட்டுவது?” என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்த் திரைப்பட வர்த்தக சபையின் அறிவிப்பின் படி, இன்று தமிழகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் காட்சிகள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன.