Home Featured இந்தியா பரப்பன அக்ரஹாரா சிறையில் 36 பேருக்கு எயிட்ஸ் – அதிர்ச்சித் தகவல்!

பரப்பன அக்ரஹாரா சிறையில் 36 பேருக்கு எயிட்ஸ் – அதிர்ச்சித் தகவல்!

988
0
SHARE
Ad

பெங்களூர் – கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சுமார் 4,400 கைதிகளுக்கு, அண்மையில் நடத்தப்பட்ட முழு உடல் பரிசோதனையில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அதில் சுமார் 36 கைதிகளுக்கு எயிட்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் பல கைதிகளுக்கு காசநோய், வலிப்பு நோய், நுரையீரல் பிரச்சினை, இதய நோய் உள்ளிட்ட வியாதிகள் இருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

மேலும், 2,300 கைதிகளுக்கு மட்டுமே இடமிருக்கும் சிறையில் 4,400 கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு மருத்துவம் பார்க்க மொத்தம் 3 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடராஜனும் இச்சிறையில் தான் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.