நியூடெல்லி – ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவது குறித்த அமைச்சரவையின் அறிவிப்பை கடந்த புதன்கிழமை மாலை நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.
அதனையடுத்து, இந்தியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான இண்டிகோ, ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கிறது.
இண்டிகோவின் தலைவர் ஆதித்யா கோஷ் வான்போக்குவரத்து அதிகாரிகளுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் அனைத்துலக இயக்கங்களை வாங்க தங்களது நிறுவனம் விரும்புவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒருவேளை அவை தனித்தனியாகக் கிடைக்காது என்றாலும், மொத்தமாக ஏர் இந்தியாவை வாங்கவும் தாங்கள் தயாராக இருப்பதாக கோஷ் தெரிவித்திருக்கிறார்.