Home Featured உலகம் உடன்பிறந்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த லீ சியான் லூங் விரும்பவில்லை!

உடன்பிறந்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த லீ சியான் லூங் விரும்பவில்லை!

1374
0
SHARE
Ad

சிங்கப்பூர் – அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகத் தன் மீது குற்றம் சாட்டி வரும் தனது சகோதரர் மற்றும் சகோதரிக்கு எதிராக சட்டப்பூர்வ நடிவடிக்கைகளை மேற்கொள்ள தான் விரும்பவில்லை என சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த லீ, உடன் பிறந்தவர்கள் மீது வழக்குத் தொடுத்து நீதிமன்றத்தில் நிறுத்தினால், தனது பெற்றோரின் பெயருக்கு மேலும் களங்கும் நேரும் என்பதோடு, சிங்கப்பூரர்களுக்கு மேலும் அதிருப்தி ஏற்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் யோசனை தனக்கு இல்லை என்றும் லீ தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

 

Comments