Home இந்தியா திரையரங்குகள் மூடப்படாது: அபிராமி ராமநாதன்

திரையரங்குகள் மூடப்படாது: அபிராமி ராமநாதன்

1090
0
SHARE
Ad

Theatersசென்னை – தமிழக அரசின் கேளிக்கை வரி உயர்வு குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் அக்டோபர் 6 முதல் தமிழ்ப் படங்கள் திரையிடப்படாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நேற்று அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி இராமநாதன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், திரையரங்குகளை மூடும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், 10 விழுக்காடு கேளிக்கை வரியை இரத்து செய்யக் கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைப்போம் என்றும் அபிராமி இராமநாதன் தெரிவித்திருக்கிறார்.