சென்னை – ஜூலை 1-ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்த ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு சேவை வரியைத் தாங்கள் ஆதரிப்பதாகவும், அதே வேளையில் தமிழ் நாட்டு அரசாங்கம் கொண்டு வந்துள்ள கேளிக்கை வரியை எதிர்ப்பதாகவும் கூறியுள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், காலவரையின்றி திரையரங்குகளை மூடப் போவதாகவும், இந்தப் பிரச்சனைக்கு தமிழக அரசாங்கத்துடன் தீர்வு காணப்படும்வரை திரைப்படங்கள் திரையிடப்படாது என்றும் அறிவித்துள்ளனர்.
சங்கத்தின் சார்பில் அபிராமி இராமநாதன் இன்று சென்னையில் நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கடந்த ஜூன் 5-ஆம் தேதி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அதன் தலைவர் அபிராமி இராமநாதன் தலைமையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துத் தங்களின் கோரிக்கையை முன் வைத்தபோது….