Home Featured தமிழ் நாடு சிறையில் தன் வாழ்க்கை வரலாறை எழுதும் சசிகலா!

சிறையில் தன் வாழ்க்கை வரலாறை எழுதும் சசிகலா!

1287
0
SHARE
Ad

சென்னை – பெங்களூரு சிறையில் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, தனது வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறார் என்றும் அதில் பல உண்மை நிலவரங்கள் வெளிவரும் என்றும் அவரது கணவர் ம.நடராஜன் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சியில் முதன்மை செய்தியாளர் ரங்கராஜ் பாண்டேக்கு ‘கேள்விக்கென்ன பதில்’ என்ற நிகழ்ச்சியின் வழி வழங்கிய நேர்காணலில், (சசிகலா) நடராஜன் பல அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அதில் பாண்டே கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போது, “நீங்கள் கேட்கும் இந்தக் கேள்விக்கான பதிலும் விவரங்களும் சசிகலா எழுதிக் கொண்டிருக்கும் அவரது வரலாற்றில் வெளிவரும்” எனத் தெரிவித்த நடராஜன், சசிகலா சிறையில் தனது வரலாற்றை எழுதி வருகிறார் என்றும் அதில் பல விவரங்கள் வெளிவரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.