மொடக்குறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்ரமணியம் தினகரனைச் சந்தித்திருப்பதால், அதிமுகவில் அடுத்த என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு கூடியிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் மீண்டும் இணைந்து ஆட்சியையும், கட்சியையும் வழி நடத்த முனைந்துள்ளனர் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் பின்னணியில் நடந்து வருகின்றன என்றும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தினகரனின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது பல்வேறு ஆரூடங்கள் நிலவுகின்றன.
தனது நிலைப்பாட்டை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குப் பின்னர் அறிவிக்கப் போவதாக தினகரன் தெரிவித்திருக்கிறார்.