Home Slider பிக்பாஸ்: பொய் சொல்லி ரசிகர்களிடம் மாட்டிக் கொண்ட காயத்ரி!

பிக்பாஸ்: பொய் சொல்லி ரசிகர்களிடம் மாட்டிக் கொண்ட காயத்ரி!

2044
0
SHARE
Ad

Actress Gayathri Raguram at the 2014 Indian Badminton Celebrity League Launchசென்னை – பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தான் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

இந்நிலையில் ஆர்த்தியுடன் சேர்ந்து வார்த்தைக்கு வார்த்தை போலியாக நடிக்காதே என்று ஜூலியை வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகிறார்.

இது நிகழ்ச்சியைப் பார்க்கும் நேயர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி வந்த நிலையில், சாக்லேட் மாவை தனிப்பட்ட முறையில் பிக்பாசிடம் கேட்டு வாங்கிய காயத்ரி, அதன் பின்னணியில் பிக்பாஸ் அறையில் நடந்தவற்றை சக போட்டியாளர்களிடம் பொய் சொல்லி மறைத்தது பார்வையாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்தக் காட்சிகளை இன்று சனிக்கிழமை இரவு ஒளியேறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மலேசிய ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.