கடந்த வார சம்பவங்களின்படி, கஞ்சா கருப்பு, நடிகர் பரணி, நடிகை ஓவியா, ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற்றப்பட நிகழ்ச்சியின் சக பங்கேற்பாளர்கள் வாக்களித்திருந்தனர்.
இருப்பினும் நிகழ்ச்சியைப் பார்க்கும் இரசிகர்களில் சுமார் 1 கோடியே 15 இலட்சம் பேர் நடிகை ஓவியாவும், நடிகர் பரணியும் நிகழ்ச்சியில் தொடர வேண்டுமென வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து இரசிகர்களின் வாக்குகளை குறைந்த அளவில் பெற்றவர் என்ற முறையில் கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டார்.
நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து நடத்தும் கமல்ஹாசன் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
Comments