Home Featured நாடு “மறுதேர்தல் நடத்தினால்தான் ஜசெக பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும்”

“மறுதேர்தல் நடத்தினால்தான் ஜசெக பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும்”

814
0
SHARE
Ad

zahid-hamidiகோம்பாக் – சங்கப் பதிவகத்தின் உத்தரவுக்கேற்ப ஜசெக மறு தேர்தலை நடத்த வேண்டும் – அவ்வாறு செய்யாவிட்டால் அந்தக் கட்சியின் சார்பிலான வேட்பாளர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள், என துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.

சங்கங்களின் 1966-ஆம் ஆண்டு சட்டங்களுக்கேற்ப, பொதுத் தேர்தல் நடத்தப்படும்போது ஒரு கட்சியின் வேட்பாளரின் வேட்புமனு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் அதிகாரத்துவ பொறுப்பாளர்களால் கையெழுத்திடப்பட வேண்டும் என்றும் ஹமிடி மேலும் கூறினார்.

தற்போதைய நிலவரப்படி ஜசெகவின் பொறுப்பாளர்கள் சங்கப் பதிவகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் அந்தக் கட்சியின் சார்பிலான வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என்றும் ஹமிடி விளக்கினார்.

#TamilSchoolmychoice

கடந்த சனிக்கிழமை (8 ஜூலை 2017) கோம்பாக் அம்னோ தொகுதியின் ஆண்டுப் பேராளர் கூட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது ஹமிடி இதனைத் தெரிவித்தார்.