Home Featured கலையுலகம் “முடிவெடுத்தால் யாம் முதல்வர்” – கமல்ஹாசன் கவிதை புரிகிறதா?

“முடிவெடுத்தால் யாம் முதல்வர்” – கமல்ஹாசன் கவிதை புரிகிறதா?

2398
0
SHARE
Ad

kamalசென்னை – சினிமாவில்தான் ரஜினிகாந்துக்குப் போட்டி கமல்ஹாசன் என்று நினைத்திருந்தால், அரசியலிலும் அவர்தான் போட்டியாக இருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது.

அந்த அளவுக்கு அரசியல் கருத்துகளை அண்மையக் காலமாக அள்ளி வீசுவதில் கமல்ஹாசன் சுறுசுறுப்பாக முன்னணியில் இருக்கிறார்.

அவருக்கு சளைக்காமல் தமிழக அதிமுக அமைச்சர்களும் அவரை விளாசு விளாசு என்று தங்களின் பதிலடிகளால் விளாசிக் கொண்டிருக்கின்றார்கள்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், புதிதாக ஒரு கவிதை எழுதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார் கமல். வழக்கம்போல் முதல் தடவை படித்தவுடன் புரியவில்லை.

அவரே “புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கைகளில் நாளை வரும் சேதி” என்ற முன்னுரையுடன்தான் தனது கவிதையைத் தொடக்கியிருக்கின்றார்.

அவரது வரிகளில் பளிச்சென்று தெரிவது “முடிவெடுத்தால் யாம் முதல்வர்” – என்ன சொல்ல வருகிறார் கமல்?

நீங்களும் ஒரு முறை படித்துப் பாருங்களேன் அவரது கவிதையை!

kamalhassan-twitter-19072017