Home Featured நாடு பெக்கான் தொகுதியில் நஜிப்பை எதிர்த்து மகாதீர் போட்டியா?

பெக்கான் தொகுதியில் நஜிப்பை எதிர்த்து மகாதீர் போட்டியா?

1230
0
SHARE
Ad

Mahathir-Najib-comboகோலாலம்பூர் – ஆளும் தேசிய முன்னணியை வீழ்த்தும் போராட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியைத் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லப் போவது முன்னாள் பிரதமர் துன் மகாதீர்தான் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் அவர், பொதுத் தேர்தலில் ஒரு நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிடுவாரா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.

மகாதீர் 1974 முதல் கெடா மாநிலத்தின் குபாங் பாசு தொகுதியில்தான் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வென்று வந்தார். மீண்டும் அவர் அங்கே போட்டியிட்டால், வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என அவர் ஏற்கனவே கோடி காட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் பெக்கான் தொகுதியில் தான் நஜிப்பை எதிர்த்துப் போட்டியிடக் கூடும் என மகாதீர் அறிவித்து, பொதுத் தேர்தல் பரபரப்பை மேலும் கூட்டியுள்ளார்.

பெக்கான் தொகுதியில் பொருத்தமான வேட்பாளர்கள் யாரும் இல்லையென்றால் நானே அங்கு போட்டியிடுவேன் என மகாதீர் அறிவித்திருக்கிறார்.

“போட்டியிட்டால் நான் வெல்லக்கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும். போட்டியிடுவது வெற்றி பெறுவதற்காகத்தான்” எனவும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

‘சின் சியூ டெய்லி’ சீன மொழிப் பத்திரிக்கை மகாதீர் இவ்வாறு கூறியதாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஏற்கனவே, பெக்கான் தொகுதியில் நஜிப்பை எதிர்த்துப் போட்டியிடத் தயார் என சிலாங்கூர் மந்திரி பெசாரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான அஸ்மின் அலியும் அறிவித்திருக்கிறார்.