பிரதமர் துறையில், பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ் இராஜேந்திரனின் தலைமையில் இயங்கும் செடிக் (SEDIC) அமைப்பின் நிதி உதவியுடன், கீழ்க்காணும் தமிழ்ப் பள்ளிகளில் வாசிப்பு-எழுத்து குறைபாடு (Dyslexia) உள்ள பிள்ளைகளுக்கான, மிக உகந்த கற்றல் முறையை கற்பிக்க, மலேசிய தேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தின் தலைவர் முனைவர் முல்லை இராமையா ஆசிரியர் பட்டறை நடத்தினார்:
- ஜுலை திங்கள் 18ஆம் நாள், சிரம்பான் லாடாங் புக்கிட் பெர்த்தாம் ஆரம்பத் தமிழ் பள்ளி;
- ஜுலை 19ஆம் நாள், ரொம்பின், டத்தோ கு. பத்மனாபன் ஆரம்பத் தமிழ் பள்ளி;
சிரம்பான், லாடாங் புக்கிட் பெர்த்தாம் ஆரம்பத் தமிழ் பள்ளியில் நடந்த பயிற்சிப் பட்டறையின்போது…
நெகிரி செம்பிலான் மாநில அளவில் இந்த பட்டறைகளுக்கான ஏற்பாடுகளை தமிழ் மொழி உதவி இயக்குனர் திரு சத்தியநாராயணன் அவர்கள் மிக நேர்த்தியாக செய்திருந்ததோடு இரண்டு பள்ளிகளுக்கும் பயிற்சி வழங்கும் குழுவினரை அழைத்துச் சென்று பட்டறையில் கலந்துகொண்டு இந்த பட்டறையின் முக்கியத்துவத்தை ஆசியர்களுக்கு விளக்கிச் சிறப்பித்தார். நெகிரியின் அனைத்துப் பள்ளிகளும் இப்பயிற்சிகளில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
சிரம்பான் மற்றும் ரொம்பின் தமிழ் பள்ளிகளில், நெகிரி தமிழ் மொழி முகமை கண்காணிப்பாளர் திருமதி அன்பரசி கலந்துகொண்டதோடு ஆசிரியர்கள் கற்றுக்கொண்ட முறையை பயன்படுத்த ஆவன செய்யப்போவதாகவும் உறுதி அளித்தார். மற்றும், செரம்பானில் மாவட்ட கல்வி அலுவலக லினுஸ் அதிகாரி திரு அமிர்தலிங்கம், பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு அகிலன், மற்றும் நெகிரி தமிழ் பள்ளிகளின் கண்காணிப்பாளர் திரு சங்கரும் கலந்து சிறப்பித்தனர்.
ரொம்பின், டத்தோ கு. பத்மனாபன் ஆரம்பத் தமிழ் பள்ளியில் நடந்த பயிற்சிப் பட்டறையின்போது…
ரொம்பின் பள்ளியில், ஜெம்புல்-ஜெலுபு மாவட்ட கல்வி அலுவலக அதிகாரி திரு முரளிதரன், திரு பிரகாஷ் ராவ், தம்பின் மாவட்ட கல்வி அலுவலக அதிகாரி திரு ராமமூர்த்தி மற்றும் பள்ளியின் தலமை ஆசிரியர் திரு பாரதிதாசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
135 ஆசிரியப் பெருமக்கள் இந்தப் இரு பட்டறைகளிலும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.கற்பித்தலுக்கு இன்றியமையாத கற்பித்தல் உபகரண பேழை, செடிக்கின் ஆதரவில், கலந்து கொண்ட அனைத்து தமிழ் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது
இவ்வேளையில், மலாக்கா மாநில மற்றும் நெகிரி மாநில அனைத்து தமிழ் பள்ளிகளிலும் மலேசிய தேசிய டிஸ்லெக்சியா இயக்கம் இப்பட்டறையை செவ்வனே நடத்தி முடிக்க பொருள் ஆதரவு நல்கிய செடிக் அமைப்புக்கும், மாண்புமிகு பிரதமருக்கும், பேராசிரியர் டத்தோ டாக்டர் என் எஸ் இராஜேந்திரனுக்கும், இயக்கம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.