Home கலை உலகம் வசந்தம் நிகழ்ச்சி மாற்றம்: மக்கள் அதிருப்தி!

வசந்தம் நிகழ்ச்சி மாற்றம்: மக்கள் அதிருப்தி!

1310
0
SHARE
Ad

subramaniam-dr-vasantham-interviewகோலாலம்பூர் – ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1 மணியளவில், வழக்கறிஞர் பாண்டித்துரையால் மிகச் சிறப்பாக வழிநடத்தப்பட்டு வந்த வசந்தம் நிகழ்ச்சியின், ஒளிபரப்பு நாளும், நேரமும் திடீரென மாற்றப்பட்டிருப்பது ரசிகர்கள் பலரையும் அதிருப்தியடையச் செய்திருக்கிறது.

புதிய அறிவிப்பின் படி, இதுவரை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வந்த அந்நிகழ்ச்சி இனி புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பெரும்பாலான ரசிகர்கள் அந்நிகழ்ச்சியை, தொடர்ந்து பார்த்து ரசித்து வந்தனர்.

#TamilSchoolmychoice

அதோடு, மலேசிய இந்தியர்களின் முக்கிய விவகாரங்கள் குறித்து பலதுறைகளைச் சேர்ந்த நிபுணர்களும், அறிஞர்களும், அரசாங்க அதிகாரிகளும், அமைச்சர்களும்  அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து வந்தது,மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

ஆனால் தற்போதைய நேர மாற்றம், அந்நிகழ்ச்சியைப் பெரும்பாலானவர்கள் பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்திருப்பதோடு, ஆர்.டி.எம் நிர்வாகம் மீது அதிருப்தியும் அடைந்திருக்கின்றனர்.