Home நாடு ரேபிஸ் பரவிய பகுதிகளில் மட்டுமே தடுப்பூசி: டாக்டர் சுப்ரா

ரேபிஸ் பரவிய பகுதிகளில் மட்டுமே தடுப்பூசி: டாக்டர் சுப்ரா

853
0
SHARE
Ad

subramaniam-drகோலாலம்பூர் – சரவாக்கில் வெறிநாய் கடிப்பதன் மூலம் பரவும் ரேபிஸ் நோய்க்கு இதுவரை 5 பேர் பலியாகியிருக்கின்றனர்.

இந்நிலையில், மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதனிடையே, வெறிநாய் கடித்து ரேபிஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதியில் மட்டுமே தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதற்காக அமைச்சு சுமார் 8000 தடுப்பு ஊசி மருந்துகளை வைத்திருந்ததாகவும், அவற்றில் தற்போது 2000 தடுப்பு ஊசிகள் பயன்படுத்தப்பட்டுவிட்டதாகவும் டாக்டர் சுப்ரா தெரிவித்திருக்கிறார்.