Home கலை உலகம் போதைப் பொருள் வழக்கு: நடிகை சார்மி நேரில் ஆஜர்!

போதைப் பொருள் வழக்கு: நடிகை சார்மி நேரில் ஆஜர்!

1170
0
SHARE
Ad

Actress Charmiஐதராபாத் – போதைப் பொருள் விநியோகம் செய்த வழக்கில் சிக்கியுள்ள முக்கிய நபரான கால்வின் தெலுங்கு திரையுலகில் நடிகை சார்மி உட்பட பல முன்னணி நடிகர் நடிகைகளுடன் நெருக்கமான நட்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவர்கள் அனைவரையும் தெலுங்கானாவின் சிறப்பு புலனாய்வுக் குழு தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றது.

அதன் படி, நடிகை சார்மி இன்று புதன்கிழமை விசாரணையில் கலந்து கொள்ள நேரில் ஆஜரானார்.

#TamilSchoolmychoice

அவரிடம் விசாரணைக் குழுவினர் பல கேள்விகளை எழுப்பி பதில் பெற்றிருக்கின்றனர்.

கால்வினின் செல்பேசியில் சார்மியின் எண் ‘சார்மிடா’ என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு, சார்மியுடன் வாட்சாப்பில் 1000 தகவல்கள் பரிமாறப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து சார்மி மீது காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.