Home உலகம் டிரம்ப் போல் வேடமணிந்து ஏ.டி.எம் கொள்ளை!

டிரம்ப் போல் வேடமணிந்து ஏ.டி.எம் கொள்ளை!

1043
0
SHARE
Ad

italytrumpfacemasktheftரோம் – வடக்கு இத்தாலியில் ஏ.டி.எம் மையம் ஒன்றில் அமெரிக்க அதிபர் டிரம்ப் போல் முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

சுமார் 1 லட்சம் யூரோ கொள்ளை போன இச்சம்பவத்தில்,காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் 1997-ம் ஆண்டு வெளிவந்த ‘தி ஜாக்கில்’ என்ற திரைப்படத்தைப் பார்த்து அது போன்ற கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது.

தற்போது அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், டிரம்ப் முகமூடி மற்றும் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்கப் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.