Home நாடு ஹாடிக்கு 2 மாத ஓய்வு – மருத்துவர்கள் அறிவுரை!

ஹாடிக்கு 2 மாத ஓய்வு – மருத்துவர்கள் அறிவுரை!

880
0
SHARE
Ad

Hadi Awang PAS Presidentகோலாலம்பூர் – பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், 2 மாத காலம் ஓய்வில் இருக்க வேண்டுமென அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறியிருப்பதாக பாஸ் பொதுச்செயலாளர் தாகியுதின் ஹசான் தெரிவித்திருக்கிறார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருதய வால்வில் ஏற்பட்ட கசிவு காரணமாக தேசிய இருதய மருத்துவமனையில் ஹாடிக்கு 3 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, அவருக்கு 2 மாதங்கள் முழு ஓய்வு தேவை என மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பதாக தாகியுதின் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“அவர் எப்போது நன்றாக இருக்கிறாரோ அப்போது நாடாளுமன்றம் வருவார். அவருடைய உடல்நலம் நன்றாக உள்ளது. என்றாலும், 2 மாதங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுரை வழங்கியிருக்கின்றனர்” என்று நாடாளுமன்ற வளாகத்தில் இன்று தாகியுதின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.