Home கலை உலகம் என்னை நிறையபேர் காதலிக்கிறார்கள்- நடிகை சார்மி

என்னை நிறையபேர் காதலிக்கிறார்கள்- நடிகை சார்மி

1313
0
SHARE
Ad

sharmiசென்னை, மே 7- ‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி.

‘ஆஹா எத்தனை அழகு’, ‘காதல் கிசுகிசு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் சார்மி அளித்த பேட்டி வருமாறு:-

#TamilSchoolmychoice

நான் பஞ்சாபி பெண். தமிழ், தெலுங்கில் சரளமாக பேச தெரியும். தெலுங்கு படமொன்றில் விலை மாதுவாக நடித்து வருகிறேன். கதை பிடித்ததால் அந்த கதாபாத்திரத்தில்  நடிக்க சம்மதித்தேன்.

நிறைய காட்சிகள் அழ வைத்தன. இது வரை 49 படங்களில் நடித்துவிட்டேன். ஆனாலும் நிறைவு இல்லை. எதையும் சாதித்து விடவும் இல்லை. யோகா உடற்பயிற்சியால் உடம்பை அழகாக வைத்துள்ளேன். புடவை எனக்கு பிடிக்கும். தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுவேன்.

எல்லா மதங்களும் எனக்கு சம்மதம். தங்க நகைகள் அணிய பிடிக்காது. எனக்கு 24 வயது ஆகிறது. சினிமாவுக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. அரிசி உணவுகளை நான் சாப்பிடுவது இல்லை. காலையில் 5 டம்ளர் வெந்நீர் குடிக்கிறேன். அதன் பிறகு ‘கிரீன்டீ’ குடிப்பேன். காபி, டீ பிடிக்காது. பால் அருந்துவதை விட்டு பதினைந்து வருடம் ஆகிறது. பாயாசமும் சாப்பிடமாட்டேன். மோர் குடிப்பேன். மதிய உணவு காய்கறிகள் மட்டும்தான். இரவில் சூப் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவேன். வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அரிசி சாதம் சாப்பிடுவேன்.

என்னை நிறைய பேர் காதலிக்கின்றனர். நேரிலும் ‘ஐலவ்யூ’ என்றார்கள். எனக்கு காதல் வரவில்லை. இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு கணவராக வருபவர் எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனையும் இல்லை. திருமணம் நடக்கும் போது நடக்கட்டும். இவ்வாறு சார்மி கூறினார்.