Home அரசியல் பேரா மாநில மந்திரி பெசாராக டத்தோஸ்ரீ ஜம்ரி பதவி ஏற்றார்

பேரா மாநில மந்திரி பெசாராக டத்தோஸ்ரீ ஜம்ரி பதவி ஏற்றார்

732
0
SHARE
Ad

zamry

ஈப்போ, மே 7- பேரா மாநில மந்திரி பெசாராக   டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி இன்று கோலகங்சாரில் உள்ள இஸ்தானா இஸ்கந்தரியா அரண்மனையில் பதவி ஏற்றார்.

இந்நிகழ்வு இன்று காலை 10.45 மணிக்கு பேரா மாநில அரசர் டாக்டர் நஸ்ரின் ஷா முன்னிலையில் நடைபெற்றது. இதில் பங்கோர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜம்ரியின் மனைவி டத்தின்ஸ்ரீ சரிப்பா சுல்கிப்ளி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

பொதுத்தேர்தலில் ஜம்ரி பின் அப்துல் காதர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் கட்சியைச் சேர்ந்த முகமட் சப்புல்லா பின் முகமட் சுல்கிப்ளி விட  5, 124 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்று பங்கோர் சட்டமன்றத்தை கைப்பற்றினார்.

13 ஆவது தேர்தலில் தேசிய முண்ணனி பேரா மாநிலத்தில் 31 சட்டமன்ற இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.