Home கலை உலகம் படப்பிடிப்பில் நடிகை சார்மி மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதி!

படப்பிடிப்பில் நடிகை சார்மி மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதி!

1338
0
SHARE
Ad

mantra-2-movie-charmi-latest-pics-new-stills-wallpapers-images-pictures-1சென்னை, ஏப்ரல் 13 – வித்தியாசமான கதாபாத்திரத்திலும், அசாதாரனமான வேடங்களிலும் துணிச்சலாக நடிக்க கூடியவர் சார்மி. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் தெலுங்கில் நடித்து வரும் படம் ஜோதிலட்சுமி. இப்படத்திற்கான சண்டை காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. சண்டையில் ஒருவர் ஹாக்கி மட்டையால் சார்மியின் தலையில் அடிப்பது போல் ஒரு காட்சி.

இந்த காட்சி படமாக்கப்படும் போது அந்த நபர் ஹாக்கி மட்டையால் சார்மியின் தலையில் வேகமாக அடித்திருக்கிறார். இதனால் ரத்த காயம் அடைந்த சார்மி மயங்கி விழுந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

உடனே படக்குழுவினர் சார்மியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், தற்போது சார்மி குணமடைந்துவருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.