Home கலை உலகம் பிரபல மலேசிய நடிகை ஹானி சிவ்ராஜ் காலமானார்!   

பிரபல மலேசிய நடிகை ஹானி சிவ்ராஜ் காலமானார்!   

1151
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 13 – மலேசியாவின் புகழ்பெற்ற நடிகையான ஹானி சிவ்ராஜ் இன்று அதிகாலை காலமானார்.

புற்றுநோய் முற்றிய நிலையில், கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

11130252_10152693921087187_9121194429156689878_n

#TamilSchoolmychoice

மலேசியாவின் வெற்றிப் படங்களான அப்பளம், அனுஷ்தானா உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஹானி, இந்தியாவில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த பிரியாணி, அஜித்தின் ஆரம்பம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

விமானப் பணியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த ஹானி, கடந்த 2010-ம் ஆண்டு தொலைக்காட்சி அறிவிப்பாளராக தனது கலைப் பயணத்தை தொடங்கினார்.

அழகும் திறமையும் வாய்ந்த ஹானி சிவ்ராஜ், தான் விரும்பிய சினிமா துறையில் நல்ல வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில், புற்றுநோய் அவரை பலி கொண்டதை எண்ணி மலேசியக் கலைஞர்கள் பேஸ்புக் வாயிலாக தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஹானி சிவராஜின் இறுதிச்சடங்கு, பிஜே கம்போங் துங்குவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.