Home இந்தியா கலாம் நினைவு மண்டபத்தைத் திறந்து வைத்தார் மோடி!

கலாம் நினைவு மண்டபத்தைத் திறந்து வைத்தார் மோடி!

1159
0
SHARE
Ad

Modirameshwaramvisitஇராமேஸ்வரம் – முன்னாள் குடியரசுத் தலைவர் அமரர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் நினைவு மண்டபம் இன்று வியாழக்கிழமை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

டில்லியில் இருந்து தனிவிமானம் மூலம் மதுரையை வந்தடைந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் பேக்கரும்பை அடைந்தார்.

பின்னர், கலாம் மணி மண்டபத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து கலாமிற்கு அஞ்சலி செலுத்தினார்.

#TamilSchoolmychoice

சுமார் மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடத்தில் அருங்காட்சியகம், பூங்கா, வாகனம் நிறுத்துமிடம், அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

அதேவேளையில், கலாமின் இளமைக் காலம் முதல் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த காலம் வரையிலான முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள், காலத்தால் அழியாத ஓவியங்களாக நினைவிடத்தில் வரையப்பட்டிருக்கின்றன.

கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி ஷில்லாங்கில் பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றச் சென்ற கலாம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

கலாமின் உடல் அவரது பிறந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அருகே உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.