Home உலகம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் நீக்கம்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் நீக்கம்

1161
0
SHARE
Ad

nawasஇஸ்லாமாபாத் – பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் பிரதமர் பதவியில் இனியும் தொடர முடியாது என்றும் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என்றும் பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நவாஸ் ஷரிப் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் டார் என்பவரையும் உச்ச நீதிமன்றம் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி முடிவுகளைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் உருவாகியுள்ளது. அத்துடன், இனி இந்தியாவுடனான தூதரக உறவுகளிலும், நல்லுறவுக்கான பேச்சு வார்த்தைகளிலும் பெரும் தேக்கமும், பின்னடைவும் ஏற்படும் என்றும் கருதப்படுகிறது.