Home நாடு “எனது அடையாள அட்டையைக் காட்டுங்கள்” – சாஹிட்டுக்கு மகாதீர் சவால்

“எனது அடையாள அட்டையைக் காட்டுங்கள்” – சாஹிட்டுக்கு மகாதீர் சவால்

1157
0
SHARE
Ad

Tun Mahathirகோலாலம்பூர் – “முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் அடையாள அட்டையை நான் பார்த்திருக்கிறேன். அதில் அவரது பெயர் மகாதீர் தகப்பனார் பெயர் இஸ்கண்டார் குட்டி என்றிருக்கும். ஆகவே அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்” என துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து, மகாதீரும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

“தைரியமிருந்தால் சாஹிட் என்னுடைய அடையாள அட்டை நகலைக் காட்டட்டும்” என மகாதீர் சவால் விடுத்துள்ளார்.

“சாஹிட் ஒரு பொய்க்காரர். என்னுடைய முதல் அடையாள அட்டை நான் எடுக்கும்போது நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். அது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அவர் பார்த்ததாகக் கூறும் அடையாள அட்டையைக் காட்டட்டும். நானும் பார்க்க விரும்புகிறேன்” என மகாதீர், பெர்சாத்து கட்சியின் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி போல, இதனையும் சாஹிட் அரசாங்க இரகசியம் என்று மறைக்கக்கூடாது. தைரியமாக வெளியிட வேண்டும்” எனவும் மகாதீர் சவால் விடுத்துள்ளார்.