Home இந்தியா கமலுக்கு குஷ்பு ஆதரவு!

கமலுக்கு குஷ்பு ஆதரவு!

1112
0
SHARE
Ad

kushbooசென்னை – நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவருக்கு ஆதரவு அளிப்பேன் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கும் குஷ்பு, “கமலின் டுவிட்டர் கருத்துக்களால் அரசியல் களம் பரபரப்படைந்திருக்கிறது. ஊழலுக்கு எதிரான கமலின் கருத்துகள் வரவேற்கத்தக்கது. நண்பர் கமல் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவருக்கு எனது ஆதரவும், அன்பும் எப்போதும் உண்டு” என்று குஷ்பு தெரிவித்திருக்கிறார்.