நீண்ட தூரப் பயணிகளில் பணியாற்றும் விமானப் பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனமே தங்கும் விடுதிகளை ஏற்பாடு செய்யும். அங்கு தங்கி ஓய்வெடுத்துவிட்டு தான் விமானப் பணியாளர்கள் அடுத்தப் பயணத்திற்குத் தயாராவார்கள்.
அந்த வகையில், ஏர் இந்தியா நிறுவனம் சிகாகோ நகரில் அமைந்திருக்கும் பிரபல தங்கும்விடுதி ஒன்றில்,தங்கள் ஊழியர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் தங்குமிட வசதி செய்து கொடுத்து வருகின்றது.
ஆனால் அங்கு தங்கச் செல்லும் ஏர் இந்தியா ஊழியர்கள் ஒவ்வொரு முறையும் பல விரும்பத்தகாத சம்பவங்களை எதிர்கொள்வதாக தங்களது புகார் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
தனியாக உறங்கவே பயப்படும் அவர்களால், சரியாக உறங்கி ஓய்வெடுக்க முடியவில்லை என்றும் தங்களது புகாரில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், தங்களுக்கு இனி அந்த தங்கும்விடுதி வேண்டாம் என்றும், வேறு தங்கும்விடுதியில் தங்க ஏற்பாடு செய்து தரும்படியும் அவர்கள் ஏர் இந்தியா நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.