Home நாடு ‘லைக்’ செய்ததற்காக மரீனா மீது புகார் – கைது செய்ய கோரிக்கை!

‘லைக்’ செய்ததற்காக மரீனா மீது புகார் – கைது செய்ய கோரிக்கை!

767
0
SHARE
Ad

Marina Mahathirகோலாலம்பூர் – ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய டுவிட்டர் பதிவு ஒன்றை ‘லைக்’ செய்த போராட்டவாதியும், முன்னாள் பிரதமரின் மகளுமான மரீனா மகாதீருக்கு, எதிராக ஜெஎம்எம் (Jaringan Melayu Malaysia) என்ற அமைப்பு, கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகாரத்துறையிடம் புகார் அளித்திருக்கிறது.

“எல்ஜிபிடி கம்யூனிட்டி (Lesbian, Gay, Bisexual and Transexual community) வெளியிட்ட டுவிட்டர் பதிவு ஒன்றை மரீனா ஆதரித்திருக்கிறார். அதனால் தான் அவர் அதனை ‘லைக்’ செய்திருக்கிறார். ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் அதனை ‘லைக்’ செய்திருக்க மாட்டார். எனவே அவரைக் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும்” என ஜெஎம்எம் தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.

படம்: நன்றி (Malaysiakini)