Home நாடு அக்டோபரில் பொதுத் தேர்தலா? – காணொளியால் பரபரப்பு!

அக்டோபரில் பொதுத் தேர்தலா? – காணொளியால் பரபரப்பு!

1047
0
SHARE
Ad

general-election-14கோலாலம்பூர் – வரும் அக்டோபர் மாதம் பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவுகள் நடைபெறவிருப்பதாக அறை ஒன்றில் சிலக் குழுவினர் அறிவிக்கும் காணொளி ஒன்று தற்போது வாட்சாப்பில் பரவி வருகின்றது.

அக்காணொளியில் அதிகாரிகள் தேர்தலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வது போல் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.

இந்நிலையில், அது குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் தேர்தல் ஆணையம், அது கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளந்தானில் தேர்தல் ஆணையப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் குறித்த பயிற்சிகள் என்று விளக்கமளித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மேலும், “ஒவ்வொரு முறையும் நாங்கள் வழக்கமாக எங்களது பணியாளர்களுக்குக் கொடுக்கப்படும் முன்கூட்டிய பயிற்சி தான்” என்று தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.