வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டரை விட்டு விலகப் போவதாகத் தகவல்கள் பரவின.
காரணம், அளவுக்கு அதிகமான பல தகவல்கள் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுகிறார் என்றும், பல பிரச்சினைகள் அதனால் உருவாகின்றன என்றும் டிரம்ப் மீது வெள்ளை மாளிகையில் குறை கூறல்கள் எழுந்தன.
மேலும், அமெரிக்க அதிபராக உள்ளவர்களின் தனிப்பட்ட தகவல்களை அந்நாட்டு அரசு கவனத்துடன் கையாண்டு வருகின்றது.
இந்நிலையில், டிரம்ப்பின் புதிய தலைமை அதிகாரியாக முன்னாள் கப்பல் படைத் தலைவர் பதவி ஏற்றதையடுத்து, டிரம்ப்பின் ‘டுவிட்டர் ஆர்வத்தை’ கட்டுக்குள் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் தகவலில், “போலியான ஊடகங்களும், டிரம்ப்பின் எதிரிகளும் தான் நான் நட்பு ஊடகங்களில் இருப்பதைத் தடுக்க நினைக்கின்றனர். உண்மையை அறிந்து கொள்ள நான் அதை தான் பயன்படுத்துகிறேன்” என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.