Home கலை உலகம் ஃபெஃப்சி வேலை நிறுத்தம்: ரஜினி கூறும் அறிவுரை!

ஃபெஃப்சி வேலை நிறுத்தம்: ரஜினி கூறும் அறிவுரை!

788
0
SHARE
Ad

Rajiniசென்னை – ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையிலான பிரச்சினையை முன்வைத்து நேற்று முதல் ஃபெஃப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ‘காலா’, விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘மெர்சல்’ உள்ளிட்ட சுமார் 40 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தனது நிர்வாகிகளுடன் இன்று புதன்கிழமை ரஜினியைச் சந்தித்துப் பேசினார்.

#TamilSchoolmychoice

ரஜினியும், கமலும் இணைந்து இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண வேண்டும் என்று செல்வமணி கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, செல்வமணியின் சந்திப்பிற்குப் பிறகு ரஜினி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எனக்கு பிடிக்காத சில சொற்களில், ‘வேலை நிறுத்தம்’ என்கிறதும் ஒன்று. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சுயகெளரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி, அன்பான வார்த்தைகளிலேயே பேசித் தீர்க்கலாம். தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் விரைவில் கலந்து பேசி சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று மூத்த கலைஞன் என்கிற முறையில் இது எனது அன்பான வேண்டுகோள்” என்று ரஜினி தெரிவித்திருக்கிறார்.