Home One Line P1 மரினா மகாதீர், அம்பிகா சீனிவாசன் காவல் துறையால் விசாரிக்கப்படுகின்றனர்!

மரினா மகாதீர், அம்பிகா சீனிவாசன் காவல் துறையால் விசாரிக்கப்படுகின்றனர்!

989
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மனித உரிமை ஆர்வலர்களான டத்தோ அம்பிகா சீனிவாசன் மற்றும் டத்தின் படுகா மரினா மகாதீர் இருவரும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஒரு கூட்டத்தில் ஈடுபட்டது தொடர்பில் காவல் துறையின் விசாரணையில் உள்ளனர்.

அவர்கள் இருவரும் இன்று விசாரணைகளை எதிர்நோக்கி உள்ளனர் என்று தேசிய காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார். ஆனால், அவர்கள் மீது சுமத்தப்பட இருக்கும் குற்றங்களை அவர் குறிப்பிடவில்லை.

புக்கிட் அமான் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் தொடர்பாக காவல் துறை புகார் அறிக்கையைப் பெற்றது. நாங்கள் விசாரிக்கிறோம்.” என்று கூறினார்.